Wednesday, 6 April 2016

பொய் சொல்லும் வாய்க்கு..
போஜனம் கிடைக்காது...
போனசும் கிடைக்காது..

மடல் சொல்லும்  உண்மை..

தேர்தல் நடைபெறும் நேரம்..
ஒரு முதன்மைச்சங்கம்
தனது பொறுப்புகளை மறந்து...
பல முறை விவாதிக்கப்பட்ட ஒரு பிரச்சினையை
நிர்வாகத்தின் பரிசீலனையில் உள்ள பிரச்சினையை
கையிலெடுத்து போராட்ட அறிவிப்பு செய்திருப்பது...
முற்றிலும் முரண்பாடான செயலாகும்...

இரண்டு இலக்கத்தில் போனஸ் கொடுப்பதற்கு.,
BSNL  நிர்வாகமும் NFTE சங்கமும்
திரைமறைவில் உடன்பாடு போட்டுள்ளன
என்று கூறப்படும் குற்றச்சாட்டு
மிக மிக அபத்தமானது.. ஆதாரமற்றது...
இத்தகைய அபத்தமான குற்றச்சாட்டுக்களை
நாங்கள் தீவிரமாக கவனத்தில் கொள்கிறோம்...
மேலும் இத்தகைய..
தரம் தாழ்ந்த வார்த்தைகளைத் தவிர்த்து வாழ
தங்களுக்கு அறிவுரை செய்கிறோம்...

BSNLEU சங்கம்
போனஸ் பேச்சுவார்த்தையில்...
கலந்து கொள்ளாதபோது...
இரண்டு இலக்கத்தில் போனஸ் 
கொடுக்கப்பட முடிவாகிவிட்டது என  
எவ்வாறு கூற முடிந்தது?...

இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது...
இத்தகைய புறம்பான செய்தியை..
ஊழியர் மத்தியில் பரப்பியதின் மூலம்..
நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது...

எனவே இத்தகைய
உண்மைக்குப் புறம்பான செய்திகளை
மக்கள் மத்தியில் கொண்டு செல்லும்
தவறான செயல்களை தவிர்க்க வேண்டுமாய்
மீண்டும் நாங்கள் அறிவுறுத்துகின்றோம்...

இருந்தபோதும்...
போனஸ் விவகாரத்தில்...
இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
என்பதை நாங்கள் தெரியப்படுத்த  விரும்புகின்றோம்...

தற்போது நாம் அனைவரின் குறிக்கோள்
7வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலை
அமைதியுடன் நடத்தி  முடிக்க வேண்டும் என்பதேயாகும்...
மாறாக இன்றையத் தேவை...
போராடுவதும் பொய்களைப் புனைவதும்  அல்ல...
உங்களைத் திருத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம்...

தோழர்களே...
மேலே கண்ட மடல்..
தோழர்கள்.C.சிங்கோ... இஸ்லாமோ...
அன்புத்தோழர் அபிமன்யுவிற்கு எழுதிய மடல் அல்ல...

BSNL நிர்வாகம் 06/04/2016 அன்று..
பொய் சொல்லலாகாது...
புறம் சொல்லலாகாது..
போராட்டப் புலி வேடம் கூடாது...
என்று அறிவுறுத்தி  
BSNLEU  சங்கத்திற்கு எழுதிய மடல்...

நிர்வாகம் சொன்னது
ஒரு புறம் இருக்கட்டும்...
இவர்களது நாடகத்தைக் கண்டு...
ஊழியர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்...

பொய் சொல்லும் வாய்க்கு  போஜனம் கிடைக்காது...
புறம் கூறும் சங்கத்திற்கு...அங்கீகாரம் கிடைக்காது...

No comments:

Post a Comment