உயர்ந்த... கரங்கள்...
ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி
என்று பாடினான் பாரதி.
இதோ பெங்களூருவில் எழுந்தது ஒரு புதுப்புரட்சி.
தொழிலாளர்கள் குருவி போல் சேர்த்த
தங்களது வைப்புநிதியை EPF பணத்தை 58 வயது வரை எடுக்க முடியாது என்ற மத்திய அரசின் மனித விரோத உத்திரவை எதிர்த்து பெங்களூரின் ஆயத்த ஆடைத் தயாரிப்பு தொழிலாளர்கள் பொங்கி எழுந்த காட்சி தொழிலாளர் வர்க்கத்தைத் தலை நிமிர வைத்து விட்டது.
20000க்கும் அதிகமான தொழிலாளிகள் வீதியில் இறங்கினர்.
தானாகவே வெடித்த, யாரும் தலைமை ஏற்காத
இந்தப் புரட்சி கண்டு மிரண்டது மத்திய அரசு.
LEADERLESS PROTEST - தலைவர்களற்ற போராட்டம்
என பத்திரிகைகள் பெயர் சூட்டின.
இறுதியில் அரசு பின் வாங்கியது.
ஊழியர் விரோத உத்திரவை திரும்பப் பெற்றது.
ஆனால் மீண்டும் தொழிலாளிகளுக்கு
துரோகம் செய்ய மத்திய அரசு முனைந்து விட்டது.
தொழிலாளர்களின் வைப்பு நிதி வட்டியை
8.8 சதம் உயர்த்திட வைப்புநிதி வாரியம் அரசுக்குப் பரிந்துரை செய்தது.
ஆனால் நிதி அமைச்சகம் பரிந்துரையை ஏற்காமல் ஏற்கனவே இருந்த
8.75 சதத்தையும் குறைத்து 8.7 சதமாக குறைத்து விட்டது.
இது வரை வைப்புநிதி வாரியம் பரிந்துரைத்த வட்டி விகிதங்களை
நிதி அமைச்சகம் மாற்றியதில்லை.
முதன் முறையாக வாரியம் பரிந்துரை செய்ததை நிதி அமைச்சகம் குறைத்துள்ளது. எனவே அனைத்து மத்திய சங்கங்களும் 29/04/2016 அன்று நாடு தழுவிய போராட்டம் நடத்த அறைகூவல் விட்டுள்ளன.
BMS சங்கம் இன்று 28/04/2016 போராடுவதாக அறிவித்துள்ளது.
அரசின் இந்த ஊழியர் விரோத முடிவை எதிர்த்து
கண்டன ஆர்ப்பாட்டம்
29/04/2016 - மாலை 5 மணிக்கு
BSNL பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெறும்.
தோழர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment