நலிந்து வரும்... நான்காவது தூண்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு
என பெருமை பேசப்படும் நமது இந்திய தேசம்
பத்திரிகைச் சுதந்திரம் தொடர்பான
உலகத்தரவரிசைப் பட்டியலில்
133வது இடத்தைப் பிடித்துள்ளது.
180க்கு 133வது இடமாகும்.
இந்திய மக்களாட்சி அமைப்பின்
நான்காவது தூண் என பத்திரிக்கை போற்றப்படுகிறது.
PEOPLE ROYAL EDUCATION SOUND SIGHT
என்ற பதமே PRESS எனவும்
NORTH EAST WEST SOUTH என்பதுவே
NEWS எனவும் சொல்வார்கள்.
அந்தக்காலத்தில் அநியாயம் செய்த
அரசர்களை அறம்பாடி அழித்ததாக
இந்திய தேசத்தில் கதைகள் உண்டு.
இன்றைய தேசத்தில்...
நடப்பதை எழுதினால்...
நடப்பை எழுதினால்..
நடப்பதுவே வேறு...
தாக்கி எழுதுபவர்கள்
தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்...
தோழர்கள்.கல்புர்கி, கோவிந்த் பன்சாரே
கொலைகளே இதற்குச் சான்று..
பத்திரிக்கையாளர்களிடம் பாரதப்பிரதமரே
அலட்சியமாக நடந்து கொள்வதாக
உலகப்பத்திரிக்கை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி
இணையதளங்களில்... முகநூல்களில்...
கருத்து தெரிவிப்பவர்களும்
நமது தேசத்தில் தாக்குதலுக்கு ஆளாகின்றார்கள்.
பேச்சுரிமை எழுத்துரிமை...
நமது அடிப்படை உரிமை...
அதை அடக்கி ஒடுக்க முயல்வது மடைமை..
No comments:
Post a Comment