மாநிலச்செயலரின் மனம்நிறை சுற்றுப்பயணம்
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்கள்
22/04/2016 அன்று காரைக்குடி மாவட்டம் முழுமையும்
காரைக்குடி, சிவகங்கை,பரமக்குடி மற்றும் இராமநாதபுரம்
என நான்கு வாக்குப்பதிவு மையங்களில்
சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தனது அற்புத உரைவீச்சில்
NFTEன் அரும்பெரும் சாதனைகளையும்,
BSNLEUவின் அறியாமையையும்,
இயலாமையையும் எடுத்துரைத்தார்.
அனைத்து மையங்களிலும் தோழர்கள்
உற்சாகமாக கலந்து கொண்டனர்.
நீண்ட தூரம்... நெடிய பயணம்...
கொளுத்தும் வெயில்..கொட்டும் வியர்வை...
என எதையும் பொருட்படுத்தாது
இணைந்த கரங்களுக்கு
வாக்கு கேட்ட மாநிலச்செயலருக்கும்,
கூட்டங்களில் உணர்வுடன் பங்கேற்று அன்புடன் உபசரித்த தோழர்களுக்கும்
நமது நன்றிகள் பல...
No comments:
Post a Comment